பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடகா சட்டசபை தேர்தலில் 222 தொகுதிகளுக்குமான வாக்கெண்ணும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 107 தொகுதிகளை பாரதீய ஜனதா கைப்பற்றி தனது வெற்றியை உறுதிபடுத்தியுள்ளது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் 67 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 46 தொகுதிகளிலும் ஏனைய கட்சிகள் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. கர்நாடகாவில் பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதற்கு 112 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய நிலையில், இரு தேசிய கட்சிகளும் பெரும்பான்மையை நிரூபிக்க தவறியுள்ளன. இந்நிலையில், கர்நாடகாவில் தொங்கு சட்டசபையே உருவாககும் நிலை ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸின் ஆட்சி தொடரப் போகின்றதா அல்லது பாரதீய ஜனதா ஆட்சி அமைக்குமா என்பதை ஜனதா தளம் கட்சியே தீர்மானிக்கவுள்ளது.
கர்நாடகாவில் தொங்கு சட்டசபை – மதச்சார்பற்ற ஜனதா தளம் தீர்மானிக்கும் சக்த்தியாக உருவெடுப்பு..
177
Spread the love