தென்கொரியாவுடன் இன்று நடைபெற இருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையை வடகொரியா ரத்து செய்துள்ளது. தென்கொரியா அமெரிக்காவுடன் இணைந்து நடத்திய ராணுவ பயிற்சி காரணமாக இவ்வாறு பேச்சுவாhத்தை ரத்து செய்ய்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
கடந்த மாதம் 27ம்திகதி வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னும், தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே உன்னும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இதனைத் தொடர்ந்து இரு தலைவர்களும் கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதமற்ற பிரதேசமாக ஆக்குவதற்கு வடகொரியா எடுக்கிற முக்கிய நடவடிக்கைகள் அர்த்தம் உள்ளவை என தென், வட கொரியா ஒப்புக்கொண்டு அதில் இரு தரப்பும் தங்களது பொறுப்புகளை, பங்களிப்புகளை செய்வதற்கு உறுதி எடுத்துக்கொண்டு உள்ளன என அறிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், பன்முன்ஜோம் கிராமத்தில் இன்று புதன்கிழமை இரு நாடுகளுக்குமிடையே நடைபெறவிருந்த ரத்து டிசய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளனது.இந்தப் பேச்சுவார்தையில் கொரியப்போரை அதிகாரப்பூர்வமாகவும், முறைப்படியும் முடிவுக்கு கொண்டுவருவது பற்றியும், கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது பற்றியும் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது