Home இலங்கைஎமது தேசத்தில் இறந்த உறவினர்களையும் அவர்களின் பிள்ளைகளையும் நினைவுகூர்வதில் என்ன தவறு? ராஜித

எமது தேசத்தில் இறந்த உறவினர்களையும் அவர்களின் பிள்ளைகளையும் நினைவுகூர்வதில் என்ன தவறு? ராஜித

by admin

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின்போது உயிரிழந்தவர்கள் எமது மக்களும் அவர்களின் பிள்ளைகளுமே என்றும் அவர்களை நினைவு கூர்வதில் என்ன தவறு இருக்கிறது என்றும் சுகாதார அமைச்சரும் அரசாங்க அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

 அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்  ஊடவியலாளர் சந்திப்பு கொழும்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்றபோது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.   இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் மே 18ம் திகதியினை தேசிய இனவழிப்பு தினமாக அனுஷ்டிப்பதற்கு வட மாகாண சபை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் ஆனால் , இலங்கையை தீவிரவாதிகளிடம் இருந்து மீட்ட தினமாக நாம் கொண்டாடுகின்றோம் இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் மக்கள் விடுதலை முன்னணியினர் அன்று ஆயுதம் ஏந்திய தரப்பினரே. ஆனால் அவர்கள் இன்று உயிரிழந்தவர்களை நினைவு கூரவில்லையா? ஜேவிபினருக்கு இந்த நாட்டில் அதற்கான அனுமதி காணப்படுமாகவிருந்தால் ஏன் தமிழ் மக்களுக்கு அவர்களின் உறவுகளை நினைவு கூர அனுமதி மறுக்கப்படுகிறது. நான் உங்களிடம் ஒன்று கேட்கின்றேன் . உண்மையில் உங்களிடம் தற்பொது எழுந்துள்ள பிரச்சினை நினைவு கூரல் என்பது தொடர்பிலா அல்லது தமிழ் மக்கள் அதனை செய்கின்றனர் என்று பொறுத்துக்கொள்ள முடியாத மனப்பாங்கிலா? இந்த கேள்வியினை கேட்கின்றீர்கள்? என்று பதிலுக்கு கேள்வி எழுப்பினார்.

மற்றொரு சிங்கள ஊடவியலாளர் அமைச்சரைப் பார்த்து இறுதிக்கட்ட யுத்தத்தில் தீவிரவாதிகளே உயிரிழந்தனர் . பொதுமக்கள் உயிரிழக்கவில்லையே என வினவினார்.

இதற்குப் பதில் அளித்த அமைச்சர் சர்வதேசம் தன்னிடம் ஒரு கேளிக்கையான கேள்வியொன்றினை முன்வைத்திருந்தது . உங்களைப் போன்ற நபர்கள் இவ்வாறு கேள்வி எழுப்புவதனாலேயே அந்த கேள்வி முன்வைக்கப்பட்டது.அந்த கேள்வி என்ன தெரியுமா? சபையில் எவரேனும் அதனை பற்றி கேள்விபட்டுள்ளீர்களா? இலங்கை பிரதிநிதிகளே…! ஒரு பொது உயிரேனும் இழக்கப்படாமலா இலங்கை யுத்த வெற்றியை பெற்றது. இந்த கேள்விக்கு சிரிப்பதா அல்லது பதிலளிப்பதா நீங்களே கூறுங்கள் என அமைச்சர் கூறினார்.
அப்படியென்றால் , இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சாதாரண பொதுமக்களும் கொல்லப்பட்டனர் என்பதனை அரசாங்க தரப்பு பிரதிநிதி என்ற வகையில் நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா..? இவ்வாறு மற்றொரு கேள்வி எழுப்ப்பட்டது.

கடும் சினத்துடன் பதிலளித்த ராஜித்த சேனாரத்ன ஏன் உங்களுக்கு தெரியாதா? அல்லது எனக்குதான் தெரியாதா? அனைவரும் அறித்த உண்மையை மீண்டும் கேள்வியாக எழுப்ப வேண்டாம். மனிதாபிமானத்துடன் செயற்பட முயற்சி செய்யுங்கள் என எச்சரிக்கை விடுத்தார்.

 

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More