Home இலங்கைஅம்புலன்ஸ் வண்டி சாரதி தாக்கப்பட்டமையை கண்டித்து அடையாள பணிப்பகிஸ்கரிப்பு :

அம்புலன்ஸ் வண்டி சாரதி தாக்கப்பட்டமையை கண்டித்து அடையாள பணிப்பகிஸ்கரிப்பு :

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரிய பண்டிவிருச்சான் பிரதேச வைத்தியசாலையின் அம்புhன்ஸ் வண்டி சாரதி ஒருவரை கடந்த திங்கட்கிழமை மாலை , கடமை நேரத்தில் இனம் தெரியாத மூவர் தாக்கிய சம்பவத்தை கண்டித்து இன்று வியாழக்கிழமை (17) காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் கண்டன் மற்றும் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் இடம் பெற்றது.

நீண்ட காலமாக அம்புலன்ஸ் வண்டி சாரதியாக கடமையாற்றும் ராஜேந்திரன் சற்குனராசா (வயது-37) என்பவரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியிருந்தார்.

குறித்த சம்பவத்தை கண்டித்து மன்னார் மாவட்ட அரச சுகாதார சேவைகள் சாரதிகள் சங்கம் மற்றும் சிறிலங்கா ஜனரஞ்சக சுகாதார சேவைகள் சங்கம் ஆகியவை இணைந்து இன்று ஒரு மணி நேரம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் ஒன்று கூடி பதாதைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தினர்.
எனவே குறித்த அம்புலான்ஸ் வண்டி சாரதி மீது தாக்குதல்களை மேற்கொண்ட குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும்,குறிப்பாக கடமை நேரத்தில் அரச பணியாளர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் கண்டிக்கப்பட வேண்டியதெனவும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும்,அரச பணியாளர்கள் கடமை நேரத்தில் மரியாதையாக பேணப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More