இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய இராணுவ பணிக்குழாம் பிரதானி ஜெனரல் பிபின் ராவட் இன்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைச் சந்தித்துள்ளார்.
இதன்போது புலனாய்வு பிரிவை பயிற்றுவித்தல் மற்றும் இருநாடுகளுக்கிடையில் நவீன தொழில்நுட்ப பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.
இந்தநிலையில் சகோதர அயல்நாடுகள் என்றவகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் நீண்டகாலமாக நிலவிவரும் நற்புறவுகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி இந்த உறவினை மேலும் பலப்படுத்துவது தனது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகுமெனக் குறிப்பிட்டார்.
தீவு நாடு என்ற வகையில் சட்ட விரோத போதைப்பொருள் கடத்தல் காரணமாக இலங்கைக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி இதனை தடை செய்வதற்கு இந்திய இராணுவத்தின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.