Home பிரதான செய்திகள்பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து துடுப்பாட்ட வரிசையில் மாற்றம்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து துடுப்பாட்ட வரிசையில் மாற்றம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் கிரிக்கட் போட்டித் தொடரில் இங்கிலாந்து அணி துடுப்பாட்ட வரிசையில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. அணியின் தலைவர் ஜோ ரூட், மூன்றாம் இலக்க வீரராக துடுப்பெடுத்தாட உள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கட் போட்டித் தொடரின் போது கூடுதலான பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளப் போவதாக ரூட் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் ஜோ ரூட், நான்காம் இலக்க வீரராகவே துடுப்பெடுத்தாடும் போது களமிறங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் வியாழக்கிழமை பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி ஆரம்பாக உள்ளது. ஜோ ரூட் இதற்கு முன்னதாக 17 டெஸ்ட் போட்டிகளில் மூன்றாம் இலக்க வீரராக களமிறங்கி இரண்டு சதங்கள் அடங்களாக 47 என்ற சராசரி பெறுதிய பெற்றுக்கொண்டுள்ளார்.

அணித் தலைவர் பொறுப்பினை ஏற்றுக் கொண்டதன் பின்னர் ரூட் மூன்றாம் இலக்க வீரராக களமிறங்குவதனை தவிர்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More