Home இந்தியாகுஜராத்தில் பாரவூர்தி கவிழ்ந்து விபத்து – 19 பேர் உயிரிழப்பு

குஜராத்தில் பாரவூர்தி கவிழ்ந்து விபத்து – 19 பேர் உயிரிழப்பு

by admin

குஜராத் மாநிலம் பாவ் நகர் பகுதியில் பாரவூர்தி ஒன்று கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. குஜராத் மாநிலம் பாவ் நகர் பகுதியில் இன்று காலை சிமெண்ட் ஏற்றிச் சென்ற பாரவூத்தியல் சிமெண்ட் மூட்டைகளுக்கு மேல் பலர் அமர்ந்து பயணம் செயதுள்ளனர்.

குறித்த பாரவூர்தியானது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாயதில் இடிபாடுகளில் சிக்கி இவ்வாறு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தில் 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More