நடிகர் கமல்ஹாசன் பிக்பொஸ் 2 ஆம் பாகத்திற்கான டீசரை இணையத்தில் வெளியிட்டுள்ளார். `பிக்பொஸ்’. கடந்தாண்டு தமிழ்த் தொலைக்காட்சி உலகில் அதிகம் வரவேற்பைப் பெற்ற ஓர் நிகழ்ச்சி. இதன் முதல் பாகத்திற்கான நிகழ்ச்சி தொடங்குவதற்க்கு முன்பாகவே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது யார், பங்கேற்பவர்கள் யார் என கடுமையாக எதிர்பாரப்பை தோற்றுவித்திருந்தது.
இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உருவாக்கப்பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. பிக்பொஸ் தமிழ் நிகழ்ச்சி இந்தி நிகழ்ச்சியான பிக்பொஸ்சை அடிப்படையாகக் கொண்ட ஒரு ரியாலிட்டி ஷோ இது ஜான் டி மோல் என்பவரால் உருவாக்கப்பட்டது.
பிற பிக் பிரதர் நிகழ்ச்சிகளைப் போலன்றி, இந்தியப் பதிப்பானது வீட்டில் தங்க, பிரபலங்களைப் பயன்படுத்துகிறது, பொது மக்களிலிருந்து யாரையும் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதில்லை.
வீடு
இந்த வீடு அழகானதாக அமைக்கப்பட்டும், அனைத்து வகைகளிலும் நவீன வசதிகளைக் கொண்டதாகவும் உள்ளது, ஆனால் இரண்டு படுக்கையறைகள், நடுவீடு (வாழும் பகுதி), சமையலறை, சேமிப்பறை (ஸ்டோர் ரூம்), இரண்டு கழிப்பறை மற்றும் இரண்டு குளியல் அறைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
வீடு அழகான அறைக்கலன்களைக் கொண்டும், வீட்டு வளாகத்தில் நீச்சல் குளம், ஒரு பூங்கா, உடற் பயிற்சி சாதனங்கள் போன்றவை உள்ளன. பிக் பாஸ் வீட்டு உறுப்பினர்களுடன் குரல் வழியில் பேச கம்யூன் அறை என்ற அறை உள்ளது, கம்யூன் அறைக்கு வீட்டில் இருப்பவர்களில் யாரை வேண்டுமானாலும் பிக்பாஸ் அழைத்து கலந்துரயாடுவார். வீட்டில் தொலைக்காட்சி, தொலைபேசி, இணைய இணைப்பு, பேனா, தாள், புத்தகம், செய்தித்தாள் போன்றவற்றிற்கு அனுமதி கிடையாது.
விதிகள்
அனைத்து விதிகளும் பார்வையாளர்களிடம் கூறப்படவில்லை என்றாலும், மிக முக்கியமான விதிகள் தெளிவாக உள்ளன. பங்கேற்பாளர்கள் தமிழைத் தவிர வேறு மொழியில் பேசுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அனுமதிக்கப்படும்போது தவிர எந்த நேரத்திலும் இவர்கள் வீட்டு வளாகத்தை விட்டு வெளியேற முடியாது. பிக்பாசுடன் பேசிய விசயங்களில் அவர் யாருடனும் கலந்துரையாடக்கூடாது என்று கூறிய விசயங்களை யாருடனும் கலந்துரையாடக் கூடாது. பகல் நேரத்தில் தூங்கக்கூடாது.