சர்வதேச எல்லையில் நடத்தும் தாக்குதல்களை நிறுத்துமாறு இந்திய ராணுவத்திடம் பாகிஸ்தான் ராணுவத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாடு கோடு, சர்வதேச எல்லைப்பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இவ்வறு இந்த ஆண்டில் மட்டும் 700 முறை தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் இதில், 18 இந்திய ராணுவத்தினர் உட்பட 38 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதனைத் தொடர்ந்து இந்திய ராணுவத்தினரும் எதிர்த்தாக்குதல்கள் நடத்திவகின்றனர். அந்தவகையில் நேற்று முன்தினம் இந்தய ராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவத்தின் முகாம் அழிக்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துமுள்ளனர்.
இந்தநிலையில் , இந்திய எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்; பாகிஸ்தான் ராணுவம் உடனடியாக தாக்குதலை நிறுத்தும்படி வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது