குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
அர்ப்பணிப்புடன் கூடிய அரசியல்வாதிகள் நாட்டுக்குத் தேவை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பதுளையில் நடைபெற்ற ‘வியத் மக’ அமைப்பின் கருத்தரங்கொன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் திறமையான அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடிய தலைவர்கள் தேவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு உரிய முறையில் உறுதி செய்யப்படும் வரையில் முதலீடுகளை பெற்றுக்கொள்ள முடியாது என சுட்டிக்காட்டியுள்ள அவர் தமது திறமைகளைக் கண்டு அஞ்சியே நிதி அமைச்சர் மங்கள சமரவீர தம்மீது குற்றச்சாட்டுக்களையும் வசைபாடல்களையும் செய்வதாக தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தை கட்விழ்த்த பயங்கரமானவர் தற்போது மறு பிறவி எடுத்த குழந்தைபோல் பேசுகிறார்…