கண்டி நுவரெலியா பிரதான பாதையில் இரட்டைபாதை நகரத்தில் இருந்து தொரகல கிராமம் நீவ்பீகொக் தோட்டம் ஊடாக கொத்மலைக்கும் கொத்மலை மகாவெயிசாயவிற்கும் செல்லும் பிரதான 17 கிலோ மீற்றர் வீதி சுமார் 40 வருடங்களாக திருத்தபடவில்லை அத்துடன் பாதையின் பாலத்தின் ஒரு பகுதி உடைந்து பல மாதங்களாகியும் திருத்தபடவில்லை அதனால் அதனை திருத்தி தருமாறு கோரி இரட்டைபாதை நகரத்தில் கண்டி நுவரெலியா பிரதான பாதை மறித்து பாரிய போராட்டம் ஒன்று இன்று (21) நடைபெற்றது.
இந்தப் போராட்த்தில் கிராமத்து மற்றும் தோட்ட மக்கள் கிட்டதட்ட 5000 பேர் கலந்துக் கொண்டணர். இதனால் கண்டி நுவரெலியா பிரதான பாதையின் போக்குவரத்து தடைசெய்யபட்டு பயணிகள் மிகவும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். புஸ்ஸல்லாவ போக்குவரத்து காவற்துறையினர் உட்பட கம்பளை காவற்துறையினர் நிலமையை கட்டுபாட்டுக்கு கொண்டு வர மிகவும் சிரமப்பட்டனர்.
இந்த போராட்டம் கொட்டும் மழையிலும் தண்னீரில் கண்ணீர்மல்க நடைபெற்றது. நிலமையை அறிந்த கம்பனை பிரதேச செயளாலர் சம்பவ இடத்திற்கு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியும் போராட்டகாரர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்த பாதை அவலம் காரணமாக மேற்படி பிரதேசத்திற்கு செல்லும் வாகனங்கள் மாற்று வழியாக கண்டி நுவரெலியா பிரதான பாதையில் வகுகவ்பிட்டிய சப்லி ஊடாக செல்கின்றுது இது 05 கிலோ மீற்றர் அதிகிப்பாகும். 50 ரூபா கொடுத்து வாகனத்தில் செல்ல வேண்டிய தூரத்தை 500 ரூபா கொடுத்து செல்கின்றனர். 02 கிலோ மீற்றர் தூர செல்லும் இடத்திற்கு 05 கிலோ மீற்றர் தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
இங்கு சுமார் 10.000 த்திற்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பிரதேசத்தில் காணப்படும் தொரகொல என்ற கிராமத்தின் பெருபாளன மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர் இவர்களின் உற்பத்திகளை சநதைக்கு கொண்டு செல்ல முடியதா நிலை தோன்றி உள்ளது. அதேபோல் இந்த பிரதேசத்தில் காணப்டும் தோட்டங்கான நீவ்பீகொக் தோட்டம் ஓல்ட்பீகொக் தோட்டம் சப்லி தோட்டம் நயானன தோட்ட மக்களின் இயல்பு நிலை பாதித்துள்ளது. இங்கிருந்து வேறு இடங்களுக்கு தொழிலுக்கு செல்பவர்களுக்கும் இப் பிரதேசத்தி காணப்படும் பாடசாலைகளுக்கும் அரச நிறுவனங்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வந்து செல்ல முடியதா நிலை தோன்றி உள்ளது. கடந்த அரசாங்த்திலும் தற்போதய அரங்சாங்கத்திலும் இந்த பாதையை திருத்தி தருவதாக பலர் கூறிய போதும் நடைமுறையில் இல்லை இந்த பாதை மகாவெலி செயற்திட்டத்திற்கு உள்வாங்கபட்டதாக சிலர் கூறுகின்றனர் சிலர் பாதை அபிவிருத்தி சபைக்கு சொந்தமானது என்று கூறுகின்றனர் இருதியில் யாரும் இதை செய்வதாக இல்லை இதனால் பிரதமரும் ஜனாதிபதியும் இணைந்து தங்களுக்கு ஒரு நிரந்தரமான தீர்வினை பெற்றுத்தறுமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.