Home இலங்கைபிரித்தானிய ரக்பி வீரர்களின் மர்மமரணம் குறித்து முக்சக்கரவண்டி சாரதிகளிடம் விசாரணை..

பிரித்தானிய ரக்பி வீரர்களின் மர்மமரணம் குறித்து முக்சக்கரவண்டி சாரதிகளிடம் விசாரணை..

by admin


இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்ட பிரித்தானியாவின் இரண்டு ரக்பி வீரர்களின் மர்மமரணம் குறித்து முக்சக்கரவண்டி சாரதிகள் சிலரை விசாரணை செய்து வருவதாக இலங்கையின் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பின் இரவு விடுதியொன்றிற்கு சென்ற பின்னர் ரக்பி வீரர்கள் மரணமடைந்தது குறித்தே குற்றப்புலனாய்வு பிரிவினர் முச்சக்கர வண்டி சாரதிகள் சிலரை விசாரணை செய்கின்றனர். கொள்ளுப்பிட்டியில் உள்ள இரவு விடுதிக்கு ரக்பி வீரர்கள் சென்று கொண்டிருந்த வேளை அவர்களிற்கு பிரவுண் சுகரை வழங்கிய முச்சக்கரவண்டி சாரதியை கைதுசெய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மரணமடைந்த இரு ரக்பி வீரர்களில் ஒருவரான தோமல் பட்டி தனது மரண வாக்குமூலத்தில் முக்சக்கரவண்டி சாரதி கொடுத்த பிரவுன் சுகரை தான் பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் பல முச்சக்கர வண்டி சாரதிகளிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More