Home இலங்கைமுன்னாள் போராளியின் வீட்டு முற்றத்தில் வெடிபொருள் கண்டுபிடிக்கும் கருவியும் துப்பாக்கி ரவைகளும் மீட்பு.

முன்னாள் போராளியின் வீட்டு முற்றத்தில் வெடிபொருள் கண்டுபிடிக்கும் கருவியும் துப்பாக்கி ரவைகளும் மீட்பு.

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

விடுதலைப்புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் முன்னாள் போராளி ஒருவரின் வீட்டு முற்றத்தில் அகழ்வுப் பணிகளை விமானப்படையினர் மேற்கொண்டுள்ளனர். கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் உள்ள முன்னாள் போராளியான முனியாண்டிராஜா ரஞ்சன்(தீபன்) என்பவரின் வீட்டில் புதைத்து வைத்திருப்பதாக விமானப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இன்று 23-05-2018 கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் குறித்த இடத்தில் அகழ்வை மேற்கொள்வதற்கான அகழ்வுப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்

தர்மபுரம் 7ம் யூனிற் பகுதியில் உள்ள குறித்த வீட்டில் காவல்துறையினர் , நீதிமன்ற உத்தியோகத்தர்கள் கிராம சேவையாளர் ஆகியோர் முன்னிலையில் விமானப்படையினர் அகழ்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த அகழ்வினட போது ஒரு வெடிபொருள் கண்டு பிடிக்கப்படும் கருவியும்(ஸ்கானர்) மற்றும் ஐந்து கைதுப்பாக்கி ரவைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More