கடந்த சில மாதங்களின் முன்னர் இலங்கையில் ஏற்பட்ட இனமுறுகலை தடுக்கவென இலங்கை அரசாங்கம் சமூக வலைத்தளங்களை தடை செய்தது. இதைப்போலவே தூத்துக்குடி அமையின்மையைத் தொடர்ந்து தூதுக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி முதலிய மூன்று மாவட்டங்களில் வன்முறை மேலும் பரவாமல் தடுப்பதற்காக இணைய சேவை முடக்கப்பட்டிருப்பதாக தமிழக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நேற்றைய தினம் மக்கள் முன்னெடுத்த போராட்டத்தின்போது தமிழக காவல்துறையினர் நடாத்திய துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை இன்றைய தினமும் தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் போராட்டக்காரர்களுக்கும்காவல்துறையினருக்கும் இடையே இன்று மோதல் ஏற்பட்டது. இதன்போது நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காளியப்பன் (வயது 22) என்ற இளைஞர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த நிலையில், வன்முறை மேலும் பரவாமல் தடுக்கவும், வதந்திகள் பரவாமல் தடுக்கவும் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி முதலிய மாவட்டங்களில் இணையசேவை முடக்கப்பட்டுள்ளதாக தமிழக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.