Home இலங்கைமுன்னாள் போராளியின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது

முன்னாள் போராளியின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது

by admin

வெளிநாடு சென்ற நிலையில், திருப்பி அழைக்கப்பட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளியான நடராஜா சபேஸ்வரனை, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 8ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளை மீள உருவாக்க முயற்சிப்பதாகவும் கிளிநொச்சியில் வைத்து முன்னாள் போராளிகளுக்கு பயிற்சி வழங்கினார் எனவும்  பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் இவர் மீது  சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு அமையவே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நடராஜா சபேஸ்வரன், நேற்றுப் புதன்கிழமை நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே, அவருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More