இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான அமெரிக்க தூதுவராக, அலைனா பீ. டெப்லிட்ஸ் (Alaina B. Teplitz), அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ட்ரம்பின் இந்த பரிந்துரையை, அமெரிக்க செனட் சபை அங்கீகரித்தால், இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக அலைனா பீ. டெப்லிட்ஸ் நியமனம் பெறுவார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக தற்போது கடமையாற்றும், அதுல் கெஷாப்பின் பதவிக்காலம் இவ்வருடத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், நேபாள தூதுவராக விளங்கும் அலைனா பரிந்துரைக்கப்பட்டு உள்ளார். இவர் இதற்கு முன் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றம் மத்திய ஆசிய நாடுகளின் அமெரிக்க உயர்ஸ்தானிகராலயங்களில் பணியாற்றி இருந்ததாக குறிப்பிடப்படுகிறது.