ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பலர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வணிகர் சங்கத்தினர் நேற்று கடை அடைப்புப் போராட்டம் மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில், இதனைக் கண்டித்து தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டம் காரணமாக, தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து சேரைவகள் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பேருந்துகள், புகையிரத வழக்கம்போல் ஓடும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து முன்னேற்பாடாக சென்னையில் பாதுகாப்பு பணிகளுக்காக 12 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தலைமைச் செயலகம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மெரினா உள்ளிட்ட இடங்களில் மட்டும் 2 ஆயிரம் காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர் எனவும் போராட்டம், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் நடைபெற்றால் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு விரைந்து செல்ல அவர்கள் வாகனங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது