Home உலகம்ஈராக்கில் ஷியா பிரிவு யாத்திரிகர்கள் மீது ஐ.எஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 28 பேர் பலி

ஈராக்கில் ஷியா பிரிவு யாத்திரிகர்கள் மீது ஐ.எஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 28 பேர் பலி

by admin

ஈராக்கின் கர்பாலா நகரில் ஷி யா பிரிவு யாத்திரிகர்களை குறி வைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 10 பேர் ஈரான் நாட்டைச்சேர்ந்த யாத்திரிகர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும்  இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

அர்பயீன் பண்டிகையொட்டி கர்பாலா புனித தளத்திற்கு சென்று விட்டு  பேருந்துகளில் திரும்பிக் கொண்டிருந்த ஷியா யாத்ரீகர்கள் மீது; வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  எரிபொருள் நிலையம்  ஒன்றின் அருகே வெடிகுண்டு நிரப்பிய லொரி ஒன்று வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.  இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பினர்  பொறுப்பேற்றுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More