கடந்த 2016-ம் ஆண்டு காஷ்மீரின் நக்ரோடா ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதியை தேசிய புலனாய்வு முகாமை காவலுக்கு எடுத்து விசாரண மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தத் தாக்குதலில் 3 அதிகாரிகள் உள்பட 7 ராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தனர். அத்துடன் 3 பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகளும் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனனர். இந்த தாக்குதல் தொடர்பாக காஷ்மீர் காவல்துறையினர் வடக்கு காஷ்மீர் லோலாப் பகுதியை சேர்ந்த முனீருல் ஹசன் காத்ரி என்பவரை கைது செய்திருந்தனர்.
விசாரணையில் அவர் ஜெய்ஷ் இ முகமது என்ற தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. பாகிஸ்தானில் இந்த தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டதாக அவர் விசாரணைகளின் போது தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அவரை தனது காவலின் கீழ் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.