Home இலங்கைதென் மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் காரணமாக 11 குழந்தைகள் பலி….

தென் மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் காரணமாக 11 குழந்தைகள் பலி….

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

தென் மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 11 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் வைரஸ் தொற்றுக்குள்ளான பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தென் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் வைத்திய கலாநிதி  ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

பிறப்பிலிருந்தே சில நோய்கள் காணப்பட்ட மற்றும் விசேட தேவையுடைய குழநதைகளே இந்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் காலியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தென் மாகாணத்தில் தற்போது இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டிய மருத்துவர் ஜி.விஜேசூரிய, எதிர்வரும் இரண்டு வாரங்களில் அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More