குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்க அதிகாரிகள் வடகொரியாவிற்கு பயணம் செய்துள்ளனர். வடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் இந்த அதிகாரிகள் வடகொரியாவிற்கு பயணம் செய்துள்ளனர். எதிர்வரும் நாட்களில் சிங்கப்பூரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்ட்ராம்பிற்கும், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னிற்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட உள்ளது. வடகொரிய மற்றும் அமெரிக்க தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பில் தென் கொரிய ஜனாதிபதியும் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் பிலிப்பைன்ஸிற்கான அமெரிக்கத் தூதுவர் சுங் கிம் உள்ளிட்ட பிரதிநிதிகள் வடகொரியாவிற்கு பயணம செய்துள்ளனர். பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகளை செய்யும் நோக்கில் இவர்கள் இந்த பயணத்தினை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.