குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரிய இராணுவத்தினர் வடக்கு முனையில் யுத்தம் செய்ய ஆயத்தமாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள தென்மேற்கு சிரிய பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி பசர் அல் அசாட்டிற்கு ஆதரவான இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் இவ்வாறான தாக்குதல் ஆயத்தங்கள் எதுவும் இடம்பெறவில்லை என கிளர்ச்சிக் குழுத் தலைவர் ஒருவர் சர்வதேச ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். சிரிய அரசாங்கம் உளவியல் ரீதியில் தாக்குதல்களை நடத்துவதற்கு முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ள அவர் தாக்குதல் நடத்தப்பட்டால் அதனை எதிர்கொள்ளத் தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார். சிரிய அரசாங்கப் படையினருக்கு ஈரானும், ரஸ்யாவும் ஆதரவளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.