டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நாணயச்சுழற்சி முறை தொடரும் என சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் நிர்வாகக் கூட்டத்தில் முடிவு செய்துதுள்ளது. கிரிக்கெட் போட்டியில் எந்த அணி முதலில் துடுப்பெடுத்தாடுவது அல்லது களத்தடுப்பினை மேற்கொள்வது என்பதனை தீர்மானிப்பதற்காக நாணயச்சுழற்சி மேற்கொள்ளப்படுகின்றது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெறும் அணியின் தலைவர்தான் முதலில் யார் துடுப்பெடுத்தாடுவது அல்லது களத்தடுப்பினை மேற்கொள்வது என்பதனை முடிவு செய்வார். இது விளையாட்டு இடம்பெறும் நாடுகள் பிட்ச் உள்ளிட்ட சாதக சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு விளையாட்டினை தீர்மானிப்பதனால் எதிரணியின் கைகள் கட்டப்படுகின்றன எனவும் இதனால் ஒருதலைபட்சமான டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று ஒருதலைபட்சமான முடிவுகள் ஏற்படுகின்றன எனவும் தெரிவித்து ஐசிசி நாணயச்சுழற்சி முறையினை கைவிடலாமா என ஆலோசனை செய்தது.
இந்த நிலையில் மும்பையில் கும்பிளே தலைமையில் நேற்று இடம்பெற்ற ஐ. சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் நிர்வாகக் கூட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ‘ நாணயச்சுழற்சி போடும் முறையை வழக்கம் போல் தொடருவது என்று முடிவு செய்யப்பட்டது.
எனினும் ; வீரர்கள் நடத்தை விதிமுறையை மீறினாலோ, பந்தை சேதப்படுத்துதல் போன்ற தவறான செயலில் ஈடுபட்டாலோ , தண்டனையை அதிகப்படுத்த வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது