குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கடுமையாக விமர்சனம் செய்த நிதியியலாளர் பில் புரோடெர் ( Bill Browder ) ஸ்பெய்னில் வைத்து கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ரஸ்யாவின் பிடிவிராந்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பில் புரோடெர் ஒரு மணித்தியாலத்தில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை பில் புரோடெர்க்கு எதிராக சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என இன்டர்போல் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை பிறப்பிடமாகக் கொண்ட பில் புரோடெர் தற்பொழுது பிரேஸில் பிரஜை என்பதுடன் ரஸ்யாவின் மிகப் பெரிய வெளிநாட்டு முதலீட்டாளர்களில் ஒருவராவார் என்பது குறிப்பிடத்தக்கது