Home இலங்கைசட்டவிரோத இலங்கைப் பிரவேசம் அறுவர் கைது…

சட்டவிரோத இலங்கைப் பிரவேசம் அறுவர் கைது…

by admin

File Photo

தமிழ் நாட்டிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்குள்  பிரவேசிக்க முயற்சித்த இலங்கை அகதிகள் அறுவரை கைது செய்துள்ளதாக காங்கேசன்துறை பாவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சென்று முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதிகளுள் அறுவரே சட்டவிரோதமாக படகொன்றின் மூலம் இலங்கைக்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளனர்.

இதன்போது  இன்று  நடுக்கடலில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் குறித்த ஆறு அகதிகளையும் கைது செய்து காங்கேசன்துறை காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அத்துடன் இந்த  அறுவரையும்  அழைத்து சென்ற  மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த படகை கைப்பற்றியதோடு, படகோட்டிகளையும் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் காங்கேசன்துறை காவற்துறையினர்  மேலும் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More