Home இலங்கைதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையில் சந்திப்பு ஒன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் நடைபெற்ற இந்’த சந்திப்பு தொடர்பில்; எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன்  தெரிவிக்கையில் வடக்கு – கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும், வட கிழக்கு பிரச்சினை குறித்து அரசியல் தீர்வு ஒன்றினை  பெற்றுக்கொள்ளல் மற்றும் புதிய அரசியல் சாசனம் தயாரித்தல் உள்ளிட்ட விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டமதாக தெரிவித்தார்.

மேலும்  வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணப்படும்  காணி பிரச்சினை, அபிவிருத்தி தொடர்பாக உள்ள சவால்கள், அரசியல் கைதிகளை விடுவித்தல், இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எதிர்நோக்கும் குடும்பத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயப்பட்டது எனவும் சந்பந்தன் தெரிவித்தார்.  இந்த விடயங்கள் தொடர்பாக விரைவில்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்திக்க உள்ளதாகவும் அத்துடன் பிரச்சினைகளுக்குரிய தீர்வுகள் காணப்படும் வரை ஜனாதிபதியுடன் மாதம் ஒருமுறை சந்திப்புகளை நடத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More