Home இலங்கைதகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல்களை வழங்குவதில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் பின்னடிப்பு…

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல்களை வழங்குவதில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் பின்னடிப்பு…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – கிளிநொச்சி..

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல்களை வழங்குவதில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் பின்னடிப்பதாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.  குறித்த பிரதேச செயலகத்தின் தகவல் வழங்கும் உத்தியோகத்தரிடம் தகவல் அறியும் உரிமைச்சட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அவைக்கான தகவல்களை வழங்குவதில் பின்னடிப்பதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.

குறித்த விண்ணப்ப படிவங்கள் தபால் மூலம் அனுப்பப்படுகின்ற போதிலும், குறித்த விண்ணப்ப படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளமையை உறுதிப்படுத்துவதும் இல்லை எனவும் பொது  மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்
குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து பொதுமக்கள் தவகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு ஏற்ற உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஏற்கனவே பொது மக்களாலும், ஊடகவியலாளர்களாலும் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் அறியும் உரிமைச்சட்ட விண்ணப்ப படிவங்களிற்கான தகவல்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்படுகின்றது.
குறித்த பிரதேச செயலகத்திற்கு நிரந்தரமான பிரதேச செயலாளர் ஒருவர் நியமிக்கப்படாமையால் மக்கள் தமது கருமங்களை நிறைவேற்றுவதிலும், தகவல்களை பெற்றுக்கொள்வதிலும் பெரும் சிரமங்களை தொடர்ந்தும் எதிர்கொண்டு வருகின்றனர். எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More