Home இலங்கை100 நாள் வேலைத்திட்டம் முட்டாள்தனமானது – ஜனாதிபதியின் கருத்துக்கு பதிலளிக்க தேவையில்லை

100 நாள் வேலைத்திட்டம் முட்டாள்தனமானது – ஜனாதிபதியின் கருத்துக்கு பதிலளிக்க தேவையில்லை

by admin


ஜனாதிபதி மைத்திரிபால நேற்றைய தினம் வெளியிட்ட கருத்துக்களுக்கு பதிலளிக்க முயற்சிக்கவேண்டாமென, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று காலை சிறிகொத்தவில் நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் இளம் உறுப்பினர்கள் ஜனாதிபதியின் கருத்துக்கு பதிலளிக்க வேண்டுமெனத் தெரிவித்தமை தொடர்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் கருத்துக்கு பதிலளிப்பதை விடுத்து, மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற மறைந்த மாதுலுவாவே சோபித்த தேரரின் பிறந்ததின வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ‘தான் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், முதலாவது விடயமாக, நாடாளுமன்றத்தை கலைத்திருக்க வேண்டும் எனவும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம், 100 நாட்கள் வேலைத்திட்டத்தை கொண்டுவந்தமையால், அது தவறவிடப்பட்டதுஎனவும் அந்த 100 நாள் வேலைத்திட்டம் முட்டாள்தனமான வேலையாகும் எனவும் குறிப்பிட்டிருந்தமை தொடர்பிலேயே பதிலளிக்க வேண்டாம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More