Home இலங்கைஇலங்கை கிரிக்கெட் சபையின் தகுதிவாய்ந்த அதிகாரியாக எச். ரீ. கமல் பத்மசிறி நியமனம்

இலங்கை கிரிக்கெட் சபையின் தகுதிவாய்ந்த அதிகாரியாக எச். ரீ. கமல் பத்மசிறி நியமனம்

by admin

இலங்கை கிரிக்கெட் சபையின் தகுதிவாய்ந்த அதிகாரியாக விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எச். ரீ. கமல் பத்மசிறி நியமிக்கப்பட்டுள்ளார். நேற்றையதினம் நடைபெறவிருந்த இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாக சபைத் தேர்தல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் எதிர்வரும் 14ஆம் திகதிவரை இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இம் முறை தலைவர் பதவிக்கு போட்டியிடும் இலங்கை கிரிக்கட் சபையின் முன்னாள் செயலாளர் நிஷன்த ரணதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போதே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டது. திலங்க சுமதிபால தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் எனவும் அவரை போட்டியிட அனுமதிக்கக்கூடாது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேவேளை திலங்க சுமதிபால தலைமையிலான இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபையின் பதவிக்காலம் நேற்றுட்ன நிறைவுக்கு வந்துள்ள நிலையில் கமல் பத்மசிறியை விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா நேற்று வியாழக்கிழமை இரவு நியமித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More