இந்தியா வழங்கிய அம்புலன்ஸ் சேவையை விஸ்தரிப்பதற்காக இந்திய அரசு மேலதிகமாக 109 கோடி ரூபா நிதி வழங்கவுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக இலங்கைக்கு பயணம் செய்த போது வழங்கிய உறுதிமொழியின் அடிப்படையில் இந்தியா இலங்கைக் 147.81 கோடி இந்திய ரூபாய் நிதியுதவியில் 297 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்பட்டதுடன் அம்புலன்ஸ் சாரதி , முதல் உதவி நிபுணர்கள் மறும் ஊழியர்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டது.
இந்த அம்புலன்ஸ் சேவை சுவசெரிய அம்புலன்ஸ் சேவை என்ற பெயரில் தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் மட்டும் செயற்பட்டு வந்தது. இந்தநிலையில் அச்சேவையினை இலங்கை முழுவதும் விரிவுபடுத்துவதற்காக இந்திய அரசு இலங்கைக்கு மேலும் 109 கோடி ரூபா வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது.
கடந்த மே 31-ம் திகதி அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க இது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்துள்ள நிலையில் அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியுள்ளது.