குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான சந்திப்பின் பொது மனித உரிமை விவகாரங்கள் பற்றி பேசப்படாது என தெரிவிக்கப்படுகிறது. வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பிற்கும் இடையில் விரைவில் சந்திப்பு நடத்தப்பட உள்ளது.இந்த விசேட மாநாட்டின் போதே மனித உரிமை விவகாரங்கள் பற்றி பேசப்படக் கூடிய சாத்தியங்கள் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.
வடகொரியாவில் திட்டமிட்ட அடிப்படையில் பல்வேறு வழிகளில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. ஊடக அடக்குமுறை, மதச் சுதந்திரமின்மை, சிறைச்சாலைகளின் நிலைமை, வெளிநாட்டவர்கள் கைது, தடுத்தல் வைத்தல், பலவந்த வேலைக்கமர்த்தல், கிம் ஜொங் உன் குடும்பத்திற்கு சேவகம் செய்யுமாறு நாட்டு மக்களை பணித்தல், பெண்கள் உரிமைகளை நிலைநாட்டாமை, சிறுவர் உரிமைகள் பாதுகாக்கப்படாமை, மந்த போசாக்கு நிலைமை உள்ளிட்டன குறித்து இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது