குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
20ம் திருத்தச் சட்டம் நாட்டை மீளவும் பின்னடையச் செய்யும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். 20ம் திருத்தச் சட்டத்தை தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டமாக கொண்டு வர முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிலாபம் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதாக கூறிய அரசாங்கம் தற்பொழுது, ஜனாதிபதி தேர்தலை இல்லாதொழிக்க முயற்சிக்கின்றது என சுட்டிக்காட்டியுள்ள விமல் வீரவன்ச நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை பலவீனப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.