205
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி மாவட்டத்தில் 2018ம ஆண்டுக்கான வாக்காளர்களை பதிவு செய்வது தொடர்பான விழிப்புணர்வு பேரணியும் கூட்டமும் இன்று (04-06-2018) பச்சிலைப்பள்ளிப்பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. உண்மையான ஜனநாயகம் வாக்குரிமையில் தங்கியுள்ளது என்;ற தொனிப்பொருளில் இவ்வாண்டுக்கான வாக்காளர்களை பதிவு செய்வதற்கான நாடளாவிய ரீதியில் முன்னெடக்கப்பட்டு வருகின்ற நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 95 கிராம அலுவலர் பிரிவுகளிலும் வதியும் வாக்காளர் பதிவுகள் இடம்பெற்று வருகின்றன.
2018ம் ஆண்டின் வாக்காளர்களை பதிவு செய்வதற்கான விழிப்புணர்வு பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு பளை முல்லையடிப்பகுதியிலிருந்து ஏ-9 வீதி வழியாக பச்சிலைப்;பள்ளிப்பிரதேச செயலகம் வரை வாக்காளர்களை தெளிவூட்டும் பாதாதைகளை ஏந்தியவாறு கோசங்கள் எழுப்பப்பட்டு பேரணியாக நகர்ந்து பளைப்பிரதேச செயலகம் வரை சென்றடைந்து அங்க விழிப்புணர்வுக்கூடடம் நடைபெற்றுள்ளது.
இதேவேளை பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய போட்டியாளர்களின் பேச்சுப்போட்டி மற்றும் கவிதை என்பன இடம்பெற்றதுடன், வெற்றயீட்டிவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம்அவர்கள் உதவித்தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ் பச்சிலைப்பள்ளிப்பிரதேச செயலாளர் திருமதி ஜெயராணி பரமோதயன் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் கிராம அலுவலர்கள் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்;து கொண்டனர்.
Spread the love