குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
ஜனாதிபதிக்கு எதிராக கருத்துக்கள் வெளியிட்டும் ஊடகங்களை முடக்குவதனை ஏற்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இதேவேளை ரீ.என்.எல் தொலைக்காட்சியின் பொல்கஹாவெல ஒளிபரப்புக் கூடம் மூடக்கப்பட்டமை குறித்து விமல் வீரவன்ச பாராளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த காலங்களில் தம்மையும், கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களையும் ரீ.என்.எல் தொலைக்காட்சி விமர்சனம் செய்த போதிலும் ஊடகங்கள் முடக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதில் அளித்த, ஊடக அமைச்சர் மங்கள சமரவீர, இந்த விடயம் குறித்து தமக்கு அறியக் கிடைத்ததாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக சிரச தொலைக்காட்சி தம்மீது அடிக்கடி தாக்குதல் நடத்திய போதிலும் தாம் ஊடக நிறுவனத்தை மூட திட்டமிடவில்லை என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இதேவேளை, ரீ.என்.எல் தொலைக்காட்சி விவகாரத்தில் ஜனாதிபதி தலையீடு செய்ய வேண்டுமென ராஜாங்க அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.