அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங்-உன் ஆகியோருக்கிடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாடு சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் கேபெல்லா விடுதியில் நடைபெறவுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
குறித்த சந்திப்பு எதிர்வரும் 12ம் திகதி நடைபெறவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது சந்திப்புக்கான நேரமும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெள்ளைமாளிகை அறிவித்துள்ளது. 12ம் திகதி சிங்கப்பூர் நேரப்படி காலை 9 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை குறித்த சந்திப்பானது , சிங்கப்பூரில் உள்ள ஷாங்ரிலா விடுதியில் நடைபெறலாம் என சிங்கப்பூர் அரசின் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் சென்ட்டோசா தீவில் உள்ள கேபெல்லா விடுதியில் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.