Home பிரதான செய்திகள்50 நாடுகளில் பயணத்தினை முடித்துக் கொண்டு மொஸ்கோவைச் சென்றடைந்தது உலக கால்பந்துக் கிண்ணம்

50 நாடுகளில் பயணத்தினை முடித்துக் கொண்டு மொஸ்கோவைச் சென்றடைந்தது உலக கால்பந்துக் கிண்ணம்

by admin

உலக கால்பந்துக் கிண்ணம் 50 நாடுகளில் சுமார் 1,43,000 கிலோ மீட்டர் பயணத்தை முடித்துகொண்டு போட்டி நடைபெவுள்ள மொஸ்கோ நகரை சென்றடைந்துள்ளது. இந்த ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்துப் போட்டித் தொடர் எதிர்வரும் வரும் ஜூன் 14 முதல் ஜூலை 15 வரை ரஸ்யாவில் நடைபெறவுள்ளது.

32 அணிகள் பங்கேற்கும் 64 போட்டிகளை கொண்ட இத்தொடர் ரஸ்யாவின் 11 முக்கிய நகரங்களில் நடைபெறவுள்ளதுடன் இறுதிப்போட்டி மொஸ்கோவின் லுஸ்நிகி மைதானத்தில் ஜூலை 15-ம் திகதி நடைபெறவுள்ளது.

ஒவ்வொரு முறையும் உலக கிண்ணம், உலகை சுற்றி எடுத்து வரப்படுவது வழக்கம் என்ற வகையில் இந்தாண்டுக்கான சுற்றுப்பயணம் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் திகதி ஆரம்பமாகியிருந்தது.

அந்தவகையில் தற்போது ரஸ்யா சென்றடைந்துள்ள குறித்த கிண்ணமானது அங்குள்ள நகரங்களை சுற்றி வருகிறது. இந்த பயணம் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் அதன்பின் இறுதிப்போட்டி நடைபெறும் மைதானத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More