ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர், பந்துல குணவர்தன இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கிடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் கதைப்பதால், அவருக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ பிரதமர் பதவியை தரப்போவதில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கைக்கு தொழிற்சங்கங்களை கொண்டுவருவதற்கு சிங்கப்பூருக்கு எந்தவிதமான தேவையும் இல்லை எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கிடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில், இன்று நடைபெற்ற நாடாளுமன்ற வாய்மூல வினாவிடை நேரத்தின்போது, பந்துல குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் போட் சிட்டி, ஹம்பாந்தோட்டத் துறைமுகம், சங்கிரில்லா, ஆகியவற்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கசவின் ஆட்சிக் காலத்தில் சீனாவுக்கு வழங்கும்போது எங்களுக்கு கூறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.