Home இந்தியாநீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை

by admin


நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னை பூங்கா புகையிரத நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டள்ளனர் . ‘நீட்’ தேர்வில் தகுதி பெறாத விரக்தியில் விழுப்புரம் மாணவி பிரதீபா தற்கொலை செய்ததால், தமிழகத்தில் மீண்டும் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்து உள்ளன.

ஆந்தவகையில் சென்னையில் நேற்று பூங்கா புகையிரத நிலையம் அருகே இந்திய மாணவர் சங்கத்தினர் 50 பேர் ஒன்று கூடி மத்திய-மாநில அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி பூங்கா புகையிரத நிலையத்துக்குள் நுழைந்து, தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார புகையிரதத்தினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘நீட்’ தேர்வை ரத்து செய்யவேண்டும், மாணவி பிரதீபா மரணத்துக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று கோஷமிட்டபடி தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்து பின்னர் விடுதலை செய்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More