Home இலங்கைஹிட்லரை உச்சரிக்க தடை விதிக்கப்பட்டது போன்று பிரபாகரனின் பெயரை உச்சரிக்க தடை வேண்டும்…

ஹிட்லரை உச்சரிக்க தடை விதிக்கப்பட்டது போன்று பிரபாகரனின் பெயரை உச்சரிக்க தடை வேண்டும்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

தழிழர்களின் தலைவரென கூறப்படும் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயரை உச்சரிப்பதற்கு தடை விதிக்கப்பட வேண்டும். இல்லாவிடின் பிரபாகரனின் எச்சங்கள் மீண்டும் முளைவிட்டு பிரச்சனைகள் தலைதூக்க காரணமாகிவிடும் என மஹரகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் சம்பிக்க றணவக்க தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஜேர்மனியில் ஹிட்லரின் பெயரை உச்சரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இலங்கையிலும் பிரபாகரனின் பெயரை உச்சரிக்க தடை விதிக்கப்பட வேண்டும். இல்லாவிடின் நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியாது. அவ்வாறு நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால் மக்களுக்கு எதிராக செயற்படும் தரப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சுட்டிக் காட்டிய, அமைச்சர் சம்பிக்க றணவக்க,

யுத்தத்தில் உயிரிழந்த பயங்கரவாதிகளை விடுதலை போராட்ட வீரர்களாக நினைவுகூருவதற்கு இடமளிக்கக்கூடாது எனவும், பயங்கரவாதிகளை நினைவுகூருவதனால் நாட்டில் மீண்டும் பிரச்சினைகள் தோன்றி, இரத்த ஆறு ஓடுவதற்கு வாய்ப்புக்கள் அதிகமாக ஏற்படும் அதனை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.இந்த அடிப்படையில் அனைத்து மக்களுக்கும் இடையில் வேற்றுமை ஏற்படாத வகையில் ஒற்றுமை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பது அவசியமாகும்” என சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More