Home இலங்கைகிளிநொச்சி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் புதிய நிர்வாகம் தெரிவு

கிளிநொச்சி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் புதிய நிர்வாகம் தெரிவு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


கிளிநொச்சி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் புதிய நிர்வாகத்தெரிவு இன்று(07) இடம்பெற்றுள்ளது. இன்று( வியாழக்கிழமை) காலை பத்து மணிக்கு மாவட்ட கூட்டுறவாளர் மண்டபத்தில் மாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளரின் தலைமையில் இடம்பெற்ற புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது.

இரு குழுக்களுக்கிடையே பல்வேறு வாதப்பிரதிவாதங்களை கடந்து வாக்கெடுப்பின் மூலம் புதிய தலைவராக முன்னாள் அரசியல் துறை போராளியான சரவணன் தெரிவு செய்யப்பட்டார். தலைவர் தெரிவுக்காக ஏற்கனவே சங்கத்தில் தலைவராக இருந்த சிவமாறான் என்பவரும், சரவணன் என்பவரும் முன்மொழியப்பட்டனர். இதனால் தலைவர் தெரிவு வாக்கெடுப்பு விடப்பட்டது. இதன் போது சரவணனுக்கு 31 வாக்குகளும் சிவமாறனுக்கு 17 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

தொடர்ந்து ஏனைய தெரிவுகளும் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் மாவட்ட மற்றும் பிரதேச செயலக சமூக சேவைகள் அலுவலர்களும் கலந்துகொண்டனர்


000

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More