குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
கரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவர் டொனால்ட் சம்பத் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 22 வயதுடைய அசேல ரணசிங்க என்பவரே ஊரகஸ்மங்சந்தி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
கரந்தெனிய பிரதேச சபையின் உப தவிசாளர் டொனால்ட் சம்பத் சுட்டுக்கொல்லப்பட்டார்…
Jun 9, 2018 @ 04:05
கரந்தெனிய பிரதேச சபையின் உப தவிசாளர் டொனால்ட் சம்பத் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். எல்பிட்டிய உரகஸ்மங்ஹந்திய பிரதேசத்தில் நேற்றிரவு இந்த சம்பவம் நடந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். டொனால்ட் சம்பத் மேலும் இரண்டு பேருடன் கெப் வண்டியில் பயணித்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் துப்பாக்கி பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். சம்பவம் குறித்து எல்பிட்டிய காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.