மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் உள்ள பட்டேல் சேம்பர்ஸ் கட்டிடத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை தீயணைப்பு வீரர்கள் போராடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தில் திடீரென ஏற்பட்ட தீயானது சிறிது நேரத்தில் கட்டிடம் முழுவதும் பரவி அனைத்து இடங்களுக்கும் வேகமாக பரவிய நிலையில் முதற்கட்டமாக 12 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரரகள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
வெகு நேரமாக போராடியும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என்பதனால் மேலதிக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சி Nமுற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது திடீரென கட்டிடத்தின் முன்பக்க சுவர் இடிந்து விழுந்ததில் 2 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் மற்றும் , தீயினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது