குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஒஸ்ரியா சில பள்ளிவாசல்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒஸ்ரியாவின் வலதுசாரி அரசாங்கம் ஏழு பள்ளிவாசல்களை மூடுவதற்கும், ஒரு தொகுதி இமாம்களை நாடு கடத்தவும் தீர்மானித்துள்ளது. வெளிநாடுகளின் நிதி உதவியுடன் இயங்கி வரும் பள்ளிவாசல்களே இவ்வாறு மூடப்பட உள்ளன. அடிப்படைவாத இஸ்லாமிய கோட்பாடுகளை பிரச்சாரம் செய்யும் பள்ளிவாசல்கள் மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8.8 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட ஒஸ்ரியாவில் சுமார் 600, 000 முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வாழ்ந்து வரும் முஸ்லிம்களில் அநேகமானவர்கள் துருக்கியர்கள் அல்லது துருக்கிய பூர்வீகம் உடையவர்களாவர்.
ஒஸ்ரிய அரசாங்கத்தினால் பள்ளிவாசல்களை மூடுவதற்கு எடுத்த தீர்மானத்திற்கு துருக்கி அரசாங்கம் கடுமையான அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளது.