141
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
அரசாங்கத்திடமுள்ள அனைத்து சொத்துக்களின் பெறுமதி 814 பில்லியன் ரூபா என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையின் 2017 ஆம் ஆண்டு நிதி அறிக்கையை மேற்கோள்காட்டி அமைச்சு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது. நிதி முகாமைத்துவ சட்டத்திற்கு அமைய, அனைத்து நிதி ஆண்டு நிறைவுக்கு முன்னர் வரவு செலவுக்கான அறிக்கை ஐந்து மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட வேண்டும். அதற்கமைய, கடந்த மாதம் 31 ஆம் திகதி வரை குறித்த நிதி ஆண்டிற்கான கணக்காய்வு அறிக்கையினூடாக அதனை பகிரங்கப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Spread the love