199
நடிகர் விஜய் இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை என தெரிவித்துள்ளார். எதிர் வரும் ஜூன் 22ஆம் திகதி நடிகர் விஜய்யின் 44 நாளாவது பிறந்த நாள் ஆகும். இவரது பிறந்தநாளை கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.
அத்துடன் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்துள்ள டிராபிக் ராமசாமி என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது. எனினும் இந்த ஆண்டு தனது பிறந்தநாள் கொண்டாட்டத் தேவையில்லை என விஜய் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் உரிமைக்காக போராடிய 13 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் பலர் காயமடை்ந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவ்வாறான சூழ்நிலையில், பிறந்தநாள் கொண்டாடுவது சரியாக இருக்காது என்றும் அதனை தாம் விரும்பவில்லை என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.
Spread the love