ஆப்கானிஸ்தானின் காபூலில் இன்று அடுத்தடுத்து இடம்பெற்ற தற்கொலைத்தாக்குதல்களில் குழந்தைகள், பெண்கள் உட்பட 13 பேர் உயரிழந்துள்ளதுடன் 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் பல வருடங்களாக் இடம்பெற்று வருகின்ற உள்நாட்டுப் போரில் பெருமளவான பொதுமக்களும் ராணுவத்தினரும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தலைநகர் காபூலில் உள்ள கிராமப்புற மறுவாழ்வு மற்றும் மேம்பாட்டு அமைச்சின் நுழைவு வாயில் அருகே இன்று இடம்பெற்ற தற்கொலைப்படை தாக்குதலிலேயே இவ்வாறு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர். இன்று ஒரே நாளில் மட்டும் ஆப்கானிஸ்தானில் நடைபெற்றுள்ள இரண்டாவது பயங்கரவாத தாக்குதல் இதுவாகும்.
அந்நாட்டின், ஜலாலாபாத் பகுதியில் உள்ள கல்வித்துறை கட்டிடத்தின் அருகே இன்று காலை தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியதில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.