குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கடற்பகுதியில் இருந்து இலங்கைக்கு தொடர்ந்து கடல்அட்டை, உயிர்காக்கும் மருந்துகள் போன்றவை கடத்திச் செல்லப்பட்டு வருகின்ற நிலையில் கியூ பிரிவு காவல்துறையினர் நேற்று (11) நள்ளிரவு மேற்கொண் சோதனையின் போது கீழக்கரை கடற்கரையில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 225 பாக்கெட் போதை மாத்திரைகள், மற்றும் உயிர்காக்கும் மருந்து பொருட்களை பறிமுதல் செய்ததோடு சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். அத்துடன் அங்கிருந்து தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரை மற்றும் மருந்து பொருட்களின் மதிப்பு 50 இலட்சம் ரூபாய் என காவல்துறையினர் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் பொருட்களை செய்தியாளர்களுக்கு காட்ட காவல்துறையினர் மறுத்து விட்டதால் இதில் ஏதோ மர்மம் அடங்கியிருக்கலாம் என்ற கூறப்படுகிறது. கடத்தலில் சம்மந்தப்பட்ட யாரையோ தப்ப வைப்பதற்காக காவல்துறையினர் கடத்தல் பொருட்களை ஊடகங்களுக்கு காட்ட மறுத்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது