பங்களாதேசில் பெய்துவரும் பலத்த மழை மற்றும் மண்சரிவு காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளனர். பங்களாதேசில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் பலத்த மழையால் மியான்மர் எல்லையில் உள்ள சில மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளதுடன் வீதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதுடன் சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு உள்ளன. இந்த மழையாலும், நிலச்சரிவாலும் மியான்மரில் இருந்து அகதிகளாக வந்து உள்ள பல்லாயிரக்கணக்கான ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். அவர்களது 1,500 தங்குமிடங்கள் பாதிப்படைந்துள்ளன.மேலும் இந்த மழை, நிலச்சரிவுகளில் மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளை ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் ஒரு லட்சம் பேர் இந்த சீரற்ற காலநிலையினால பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை வேறு இடங்களில் குடி அமர்த்துவதற்கு சர்வதேச தொண்டு நிறுவனங்களின் உதவியை நாடி உள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரண அமைப்பு தெரிவித்துள்ளது.