‘தமிழ் மொழி மீதான பற்று குறைந்துகொண்டே வருகிறது என்று தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். வத்திக்குச்சி திலீபன் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் குத்தூசி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
காலா படத்தில் ரஜினியின் மகனாக நடித்து பாராட்டுகளை பெற்ற திலீபன் கதாநாயகனாக நடிக்கும் படம் குத்தூசி. இயற்கை விவசாயத்தின் மேன்மையை பற்றி பேசும் இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குனர் சீனுராமசாமி கலந்து கொண்டார்.
விழாவில் சீனு ராமசாமி பேசும்போது,
‘தமிழ் மொழி மீதான பற்று குறைந்துகொண்டே வருகிறது. ஒரு மகன் அப்பாவை அப்பா என்று அழைத்தால் ‘ஒரு லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி படிக்க வைக்கிறேன். ஒழுங்காக டாடி என்று கூப்பிடு என்று மகனை கண்டிக்கிறார் தந்தை. இந்த சூழலில் இந்த படத்தில் கதாநாயகி தமிழில் பேசியது ஆச்சர்யம் அளிக்கிறது. பேயையும் பிசாசையும் மாயஜாலத்தையும் நம்பி படம் எடுத்து வரும் சூழலில் விவசாயத்தை காக்க ஒரு படம் வருவது மகிழ்ச்சியை தருகிறது’ என்றார்.