குற்றவாளியென அறிவிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று 01 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. அத்துடன் காணாமல் போன ஊடகவிலயாளர் பிரகீத் எக்நெலிகொடவின் மனைவி, சந்தியா எக்நெலிகொடவிற்கு 50,000 ரூபா நட்ட ஈட்டினை ஒரு தடவையில் வழங்குமாறும் செலுத்தத் தவறினால் மேலும் மூன்று மாத சிறைத் தண்டனைடன் 3000 ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. குறித்த ஒரு வருடத்துக்கான சிறைத் தண்டனை 06 மாதங்களில் நிறைவடையும் வகையில் விதிக்கப்பட்டுள்ளது.
சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய சம்பவத்தில் கடந்த மே மாதம் 24ம் திகதி ஞானசார தேரர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார். 2016 ஆண்டு ஜ ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்தியமை தொடர்பிலேயே ஞானசார தேரர் குற்றவாளி எனத் தெரிவிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது